×

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான புதிய கலந்தாய்வை வைப்பது சாத்தியமல்ல: வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்..

நடந்து முடிந்த கலந்தாய்வை மீண்டும் நடத்துவது சாத்தியமல்ல என்றும் வெளிமாநிலத்தவர்கள் தமிழ் நாட்டில் இருப்பிட சான்றிதழ் பெற்றிருந்தால் அதனை மருத்துவக் கல்வி நிர்வாகமே விசாரித்து, அவர்கள் மீது ஏற்ற நடவடிக்கை எடுக்கலாம் மதுரையில் வசிக்கும் சோம்நாத், நேயா, ஸ்ரீ லயா உள்ளிட்டோர் தமிழக 2019 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வில் வெளி மாநிலவர்கள் கலந்து கொண்டதால் அந்த கலந்தாய்வை ரத்து செய்து புதிய கலந்தாய்வு நடத்தக் கோரி மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
 

நடந்து முடிந்த கலந்தாய்வை மீண்டும் நடத்துவது சாத்தியமல்ல என்றும் வெளிமாநிலத்தவர்கள் தமிழ் நாட்டில் இருப்பிட சான்றிதழ் பெற்றிருந்தால் அதனை மருத்துவக் கல்வி நிர்வாகமே விசாரித்து, அவர்கள் மீது ஏற்ற நடவடிக்கை எடுக்கலாம்

மதுரையில் வசிக்கும் சோம்நாத், நேயா, ஸ்ரீ லயா உள்ளிட்டோர் தமிழக 2019 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வில் வெளி மாநிலவர்கள் கலந்து கொண்டதால் அந்த கலந்தாய்வை ரத்து செய்து புதிய கலந்தாய்வு நடத்தக் கோரி மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தனர். 

மதுரை நீதி மன்ற நீதிபதி சுந்தர் தலைமையில் இந்த வழக்கு விசாரிக்கப் பட்டது. அதில், நடந்து முடிந்த கலந்தாய்வை மீண்டும் நடத்துவது சாத்தியமல்ல என்றும் வெளிமாநிலத்தவர்கள் தமிழ் நாட்டில் இருப்பிட சான்றிதழ் பெற்றிருந்தால் அதனை மருத்துவக் கல்வி நிர்வாகமே விசாரித்து, அவர்கள் மீது ஏற்ற நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறி சோம்நாத் உள்ளிட்டோர் பதிவு செய்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.