×

என்னை எம்.எல்.ஏ பதவியிலிருந்து நீக்கினால் சபாநாயகருக்கு கை இருக்காது: அதிமுக எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு!

சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தன்னை நீக்கம் செய்து சபாநாயகர் கையெழுத்திட்டால் அவரது கைகள் இருந்திருக்காது என்று கூறியதற்குப் பிறகு தான் தன்னிடம் நீக்கம் குறித்து பேசவில்லை என்று அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி: சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தன்னை நீக்கம் செய்து சபாநாயகர் கையெழுத்திட்டால் அவரது கைகள் இருந்திருக்காது என்று கூறியதற்குப் பிறகு தான் தன்னிடம் நீக்கம் குறித்து பேசவில்லை என்று அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தன்னை நீக்கம் செய்து சபாநாயகர் கையெழுத்திட்டால் அவரது கைகள் இருந்திருக்காது என்று கூறியதற்குப் பிறகு தான் தன்னிடம் நீக்கம் குறித்து பேசவில்லை என்று அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி: சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தன்னை நீக்கம் செய்து சபாநாயகர் கையெழுத்திட்டால் அவரது கைகள் இருந்திருக்காது என்று கூறியதற்குப் பிறகு தான் தன்னிடம் நீக்கம் குறித்து பேசவில்லை என்று அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ரத்தின சபாபதி டி.டி.வி. தினகரன் ஆதரவாளராக இருக்கிறார். டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், ரத்தின சபாபதி, கலைச்செல்வன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது அதிமுக நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ரத்தினசபாபதி பேசும் போது,’ டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் தங்களை எம்.எல்.ஏக்களை பதவியிலிருந்து நீக்கி விடுவதாக தன்னிடம் தாமரை ராஜேந்திரன் கூறினார். அப்பொழுது தன்னை சபாநாயகர் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து நீக்க கையெழுத்துப் போட்டால் அது தான் தான் சபாநாயகருக்கு கடைசி கையெழுத்தாக இருக்கும். அதற்குப் பிறகு கையெழுத்து போட கை இருக்காது என்று சொன்னேன். அதனால் தான்  தன்னுடைய நீக்கத்தைப் பற்றிப் பேசவில்லை” என்று பரபரப்பாகப் பேசினார்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ ரத்தின சபாபதி இந்த சர்ச்சைக்குரிய பேச்சால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஆளும்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் அக்கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் குறித்து பொது மேடையில் இப்படி  பேசியிருப்பது எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.