×

‘என்ன ஒரு நடிப்பு டா சாமி..’ காக்கா வலிப்பு வந்தது போல நடித்து போலீசிடம் இருந்து எஸ்கேப் ஆன குடிமகன்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அரசு பேருந்து சென்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அரசு பேருந்து சென்றுள்ளது. அந்த பேருந்தில் மூக்கு முட்டக் குடித்து விட்டு ஏறிய நபர், பயணிகள் எல்லாரையும் சீண்டி வம்புக்கு இழுத்துள்ளார். அதன் பின்னர், கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்த அவர், பெண்களை எல்லாம் தவறான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் கடுப்பான கண்டெக்டர், டிரைவரிடம் சொல்லி பேருந்தைக் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளார். அதனையடுத்து உள்ளே சென்ற டிரைவர்
 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அரசு பேருந்து சென்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அரசு பேருந்து சென்றுள்ளது. அந்த பேருந்தில் மூக்கு முட்டக் குடித்து விட்டு ஏறிய நபர், பயணிகள் எல்லாரையும் சீண்டி வம்புக்கு இழுத்துள்ளார். அதன் பின்னர், கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்த அவர், பெண்களை எல்லாம் தவறான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் கடுப்பான கண்டெக்டர், டிரைவரிடம் சொல்லி பேருந்தைக் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளார். 

அதனையடுத்து உள்ளே சென்ற டிரைவர் மற்றும் கண்டெக்டர் அந்த நபரைப் பற்றி புகார் கொடுத்துள்ளனர். அந்த சமயம் அவர் எப்படி தப்பிக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்திருப்பார் போல.. போலீசார் வந்த உடனே அவர் காக்கா வலிப்பு வந்த போல நடித்து, வாயில் நுரை தள்ளுவதை போன்றெல்லாம் நடித்து சீன் போட்டுள்ளார். அதனை உண்மை என்று நம்பிய போலீஸ், பேருந்தில் தவறாக நடந்து கொள்வதற்காகத் திட்டுவதா அல்லது அவரை காப்பாற்றுவதா என்று ஒரு நிமிஷம் திணறியுள்ளனர். 

அந்த கேப்பில் பொதுமக்கள் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு பேருந்திலிருந்து இறங்கி எஸ்கிப் ஆகியுள்ளார். அப்போது தான், அவர் நடித்தது எல்லாம் நாடகம் என்று எல்லாருக்கும் புரிந்துள்ளது. அச்சமயம் அங்கிருந்த பயணிகள், என்ன நடிப்பு டா சாமி என்று மனதுக்குள்ளே எண்ணிக் கொண்டிருந்திருப்பர். இதனையடுத்து அந்த நபரை போலீசார், தேடி வருகின்றனர்.