×

என் வீட்டின் முன்னால் இருக்கும் குப்பையை எடுக்க தெரியாதா? தூய்மை பணிப்பெண்ணை தாக்கிய கணவன் -மனைவி!

சரியாக சுத்தம் செய்யவில்லை என கூறி கணவன் மனைவியால் பணிப்பெண் ஒருவர் தாக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் மத்திய, மாநில அரசு மக்களுக்கு ஊரடங்குஉத்தரவு பிறப்பித்தாலும் மருத்துவர்கள், தூய்மைபணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை என பல துறையினர் மக்களுக்காக தொடர்ந்து உழைத்து கொண்டே தான் இருக்கின்றனர். தன்னலம் இன்றி உழைக்கும் அவர்களை பல தரப்பினரும் பாராட்டி மகிழும் நிலையில் தனது வீட்டின் முன்பு சரியாக சுத்தம் செய்யவில்லை என கூறி கணவன் மனைவியால் பணிப்பெண்
 

சரியாக சுத்தம் செய்யவில்லை என கூறி கணவன் மனைவியால் பணிப்பெண் ஒருவர் தாக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா பாதிப்பால் மத்திய, மாநில அரசு மக்களுக்கு ஊரடங்குஉத்தரவு பிறப்பித்தாலும் மருத்துவர்கள், தூய்மைபணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை என பல துறையினர் மக்களுக்காக தொடர்ந்து உழைத்து கொண்டே தான் இருக்கின்றனர்.

தன்னலம் இன்றி உழைக்கும் அவர்களை பல தரப்பினரும் பாராட்டி மகிழும் நிலையில்  தனது வீட்டின் முன்பு சரியாக சுத்தம் செய்யவில்லை என கூறி கணவன் மனைவியால் பணிப்பெண் ஒருவர் தாக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் குப்பை அள்ளிக்கொண்டிருந்த பெண் தூய்மை பணியாளர் ஒருவரை தனது வீட்டின் முன்பு சரியாக சுத்தம் செய்யவில்லை என கூறி கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் ஒருவரை  சாக்கடைக்குள் தள்ளி காலால் மிதித்து ஆடைகளை கிழித்துள்ளனர்.  “தெருவை சுத்தம் செய்ய தெரிகிறது என் வீட்டின் முன்னால் இருக்கும் குப்பையை எடுக்க தெரியாதா?”  என அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.  இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.