×

‘ என் சொந்த பிள்ளையைப் போல வளர்த்தேன்…’ காளையை நினைத்து கலங்கும் 90 வயது முதியவர்!

தனது சொந்த பிள்ளையை போல அந்த காளையை வளர்த்து வந்த இடமலையான் சொல்லுக்கு அந்த அடங்காத காளை அடிபணியுமாம். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் இடமலையான்.விவசாயியான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மாயாவு என்ற ஜல்லிக்கட்டுக் காளையை வளர்த்துள்ளார். தனது சொந்த பிள்ளையை போல அந்த காளையை வளர்த்து வந்த இடமலையான் சொல்லுக்கு அந்த அடங்காத காளை அடிபணியுமாம். சுற்றுவட்டாரத்தில் எங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தாலும் இடமலையானும் மாயாவுவும் தவறாமல் ஆஜராகி விடுவார்களாம்.
 

தனது சொந்த பிள்ளையை போல அந்த காளையை  வளர்த்து வந்த இடமலையான் சொல்லுக்கு அந்த அடங்காத காளை  அடிபணியுமாம்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் இடமலையான்.விவசாயியான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மாயாவு என்ற ஜல்லிக்கட்டுக் காளையை வளர்த்துள்ளார். தனது சொந்த பிள்ளையை போல அந்த காளையை  வளர்த்து வந்த இடமலையான் சொல்லுக்கு அந்த அடங்காத காளை  அடிபணியுமாம்.

சுற்றுவட்டாரத்தில் எங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தாலும் இடமலையானும்  மாயாவுவும் தவறாமல் ஆஜராகி விடுவார்களாம்.  கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மாயாவு  திடீரென்று இறந்துள்ளது. இதையடுத்து மாயாவு காளையின் உடலை தனது தோட்டத்தில் அடக்கம் செய்தார்  இடமலையான்.  இதனால் சோகத்தின் உச்சிக்கே சென்ற இடமலையான்  இனி எந்த காளையையும்  வளர்க்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளார்.

 

இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கலன்று மாயாவுவை புதைத்த இடத்தில் மாலையிட்டு படையல் போட்டு குடும்பத்துடன் குலசாமியை வணங்குவது போல வணங்குகிறார் இந்த 90 வயது முதியவர். தள்ளாத வயதிலும் தான் வளர்த்த காளையை  மறக்காது அஞ்சலி செலுத்தும் பாசம் கண்கலங்க வைத்துள்ளது.