×

ஊரடங்கை மதிக்காமல் சீட்டு விளையாடிய 7 பேர் கைது!

மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 52பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாக தான் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 52பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1937 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு
 

மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 52பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாக தான் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 52பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1937 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம்  என்றும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்  என்று அறிவுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில்  மதுரையில் ஊரடங்கை மதிக்காமல், கும்பலாக அமர்ந்து சீட்டு விளையாடியவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில் உள்ள சந்தனமாரியம்மன் கோயில்  வளாகத்தில் 7 பேர் கும்பலாக அமர்ந்து பணம் வைத்து சூதாட்ட முறையில் சீட்டு விளையாடி உள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் 7 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1000 ரொக்கம், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.