×

ஊரடங்கை சமாளிக்க பி.எஃப் பணத்தை எடுக்க குவியும் மக்கள்!

பிஎஃப் பணத்தில் குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது கொரோனா வைரஸ் தீவிரம் அதிகரித்ததால் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, மே மாதம் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இதனால் ஏழை, எளிய மக்கள் வருமானமில்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் மக்களுக்கு உதவும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் மக்களின் செலவினங்களை கருத்தில் கொண்டு, வேலை செய்பவர்களின் பிஎஃப்
 

பிஎஃப் பணத்தில் குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் தீவிரம் அதிகரித்ததால் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, மே மாதம் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இதனால் ஏழை, எளிய மக்கள் வருமானமில்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் மக்களுக்கு உதவும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் மக்களின் செலவினங்களை கருத்தில் கொண்டு, வேலை செய்பவர்களின் பிஎஃப் பணத்தில் குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதற்கு ஏதுவாக பிஎஃப் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இந்த ஊரடங்கை சமாளிக்க 8,20,000 பேர் அவர்களது பி.எஃப் கணக்கில் இருந்த ரூ.3,200 கோடி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மத்திய அரசின் இபிஎஃப்ஒ அமைப்பில் இருந்து 7,20,000 பேர் அவர்களது சேமிப்பு பணத்தை எடுத்துள்ளதாகவும், இதை தவிர்த்து தனியார் நிறுவனங்களில் இருந்து 80,000 பேர் பி.எஃப் பணத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இந்த ஊரடங்கால் மக்கள் எந்த அளவிற்கு பாதித்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.