×

ஊரடங்கு மேலும் 28 நாட்கள் நீட்டிப்பா? வாட்ஸ் அப்பில் உலாவரும் மாலை மலர் செய்தித்தாள்!!

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏழை எளிய மக்களும், தினக்கூலி பெறும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏழை எளிய மக்களும், தினக்கூலி பெறும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்களின் ஏழ்மையை குறைக்கும் பொருட்டு தமிழக அரசு ரூ.1000 பணமும், ரேஷன் உணவு பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன் படி
 

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏழை எளிய மக்களும், தினக்கூலி பெறும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏழை எளிய மக்களும், தினக்கூலி பெறும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்களின் ஏழ்மையை குறைக்கும் பொருட்டு தமிழக அரசு ரூ.1000 பணமும், ரேஷன் உணவு பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன் படி மக்களுக்கு நிவாரண பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவு இன்னும் நீட்டிக்க படுமா. இல்லையா என்று மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடம் வீடியோ காலில் ஆலோசனை மேற்கொண்டார். அதில், ஊரடங்கு நீட்டித்தல், உணவு பொருட்கள் விற்பனைக்கு கட்டுப்பாடு, மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இதற்கிடையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர மொத்தமாக 49 நாட்கள் ஊரடங்கு தேவை என கேம்பிரிட்ஜ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 21 நாட்கள் தொற்று எண்ணிக்கையைக் குறைக்க உதவுமே தவிர மீண்டும் கொரோனா தொற்றாது என்பதற்கான உறுதியை அளிக்காது எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் கொரோனா அதிகம் பாதித்த 274 மாவட்டங்களில் மேலும் 28 நாட்கள் மக்கள் வெளியில் வர தடை என மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தலைப்பு செய்திகளுடன் மாலைமலர் செய்தித்தாள் ஒன்று வாட்ஸ் அப்பில் உலாவருகிறது. ஆனால் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.