×

ஊரடங்கு நேரத்தில் கடன் கொடுக்கும் கரம் -ஆட்டோக்காரர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மளிகை பொருட்கள் ..

சென்னை அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் முப்பத்தேழு வயது சரவணன், இப்பகுதியில் உள்ள பலருக்கு இந்த ஊரடங்கு நேரத்தில் வரப்பிரசாதமாக அமைந்துள்ளார் . ஆம் தினசரி கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து வருமானமில்லாமல் பட்டினி கிடந்தனர். அவர்களுக்கு சரவணன் தனது கடையில் இருந்து ரூ .1000 வரை கடனாக , மளிகை பொருட்களை வாங்க அனுமதிக்கிறார். ஊரடங்கு முடிந்ததும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தை திருப்பிச் செலுத்தலாம். இதுவரை, 437 பேர் பின்னர்
 

சென்னை அயனாவரத்தில்  சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் முப்பத்தேழு வயது சரவணன், இப்பகுதியில் உள்ள பலருக்கு இந்த ஊரடங்கு நேரத்தில் வரப்பிரசாதமாக  அமைந்துள்ளார் .
ஆம்  தினசரி கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து வருமானமில்லாமல்  பட்டினி கிடந்தனர். அவர்களுக்கு சரவணன் தனது கடையில் இருந்து ரூ .1000 வரை கடனாக , மளிகை  பொருட்களை வாங்க அனுமதிக்கிறார். ஊரடங்கு  முடிந்ததும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தை திருப்பிச் செலுத்தலாம். இதுவரை, 437 பேர் பின்னர் பணம் செலுத்துவதாக கூறி அத்தியாவசிய பொருட்களை  வாங்கியுள்ளனர்.

ஊரடங்கு  தொடங்கியதிலிருந்தே தினசரி கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் போன்றவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க அத்தியாவசிய பொருட்களை வாங்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் இப்போது அவர்களிடம்  பணம் இல்லை. எனவே அவர்களுக்கு கடன் வழங்க முடிவு செய்தேன் என்கிறார் சரவணன். அவரது கடையான ஆதவன் சூப்பர் மார்க்கெட்டில் தினமும் பத்துக்கும் மேலானவர்கள்  இப்படி பொருட்களை கடனுக்கு வாங்கி செல்கிறார்கள் . “எனது கடையிலிருந்து அவர்கள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். இந்த பொருட்களின் மதிப்பு  ரூ .1,000 க்கு சற்று அதிகமாக இருந்தால் கூட பரவாயில்லை  , ”என்று அவர் கூறுகிறார்.

சிலர் அவருடைய கடையை தேடி தொலைதூரத்திலிருந்தும் வருகிறார்கள் என்று அவர் கூறுகிறார். “அவர்கள் பொருட்களை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள், நான் அவர்களுக்கு இந்த நேரத்தில்  ஓரளவிற்கு உதவினேன் என்பதை நினைக்கும்போது எனக்கு திருப்தியைத் தருகிறது,” என்று சரவணன் கூறுகிறார். அவர் திருநங்கைகளுக்கும் இப்படி பொருட்களை  விநியோகிக்கிறார்.  

மேலும் அவர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடையே சமூக தொலைவினை கடைபிடித்து ,அவர்களுக்கு  முகமூடிகளை இலவசமாக வழங்குகிறார்.  12 ஊழியர்களுடன் கடையை நிர்வகிக்கும் அவர்,  திருவள்ளூர் மாவட்டத்தில் நடத்தும் தனது இரண்டு கடைகளிலும் இந்த கடன் வசதியை ஏற்படுத்தியுள்ளார் .