×

“ஊரடங்கு உத்தரவை மீறி கறிவிருந்து”.. டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டதால் கம்பி எண்ணும் இளைஞர்கள்!

கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸின் அபாயம் தெரியாத சிலர், அந்த ஊரடங்கு நாட்களில் வயலுக்கு சென்று சமைத்து உண்ணுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற செயல்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 30க்கும் மேற்பட்டோர் கூட்டமாக பிரியாணி சமைத்து
 

கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸின் அபாயம் தெரியாத சிலர், அந்த ஊரடங்கு நாட்களில் வயலுக்கு சென்று சமைத்து உண்ணுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற செயல்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. 

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 30க்கும் மேற்பட்டோர் கூட்டமாக பிரியாணி சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் அதனை வீடியோ எடுத்து டிக் டாக் மற்றும் சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளனர். ஊரடங்கு அமலில் இருப்பினும், 144 தடை உத்தரவை மீறி இளைஞர்கள் கூட்டம் கூடி கறிவிருந்து சாப்பிட்ட இந்த வீடியோ வைரல் ஆனது. அதனைப் பார்த்த மணல்மேடு போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு கறி விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களில் 10 பேரை கைது செய்துள்ளனர். மேலும், மீதமுள்ள நபர்களை தேடி வருகின்றனர்.