×

ஊரடங்கு உத்தரவு இருந்தும் கைவரிசையை காட்டிய திருடர்கள்.. 100 சவரன் நகை கொள்ளை!

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரில் வசித்து வரும் துறைமுக ஊழியர் வின்சென்ட், வழக்கம் போல வீட்டில் உள்ள அனைத்து கதவு மற்றும் ஜன்னலையம் மூடிவிட்டு உறங்க சென்றுள்ளார். இன்று காலை வழக்கம் போல எழுந்த வின்சென்ட் மனைவி ஜான்சி, வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப் பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து
 

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரில் வசித்து வரும் துறைமுக ஊழியர் வின்சென்ட், வழக்கம் போல வீட்டில் உள்ள அனைத்து கதவு மற்றும் ஜன்னலையம் மூடிவிட்டு உறங்க சென்றுள்ளார். இன்று காலை வழக்கம் போல எழுந்த வின்சென்ட் மனைவி ஜான்சி, வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப் பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து வின்சென்ட் இடம் கூறியுள்ளார். 

உடனே பீரோவில் இரண்டு பேரும் சோதனை செய்ததில், பீரோவில் இருந்த 100 சவரன் நகை கொள்ளையடிக்கப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதனையடுத்து அவர்கள் இந்த கொள்ளை குறித்து தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்கு வந்த போலீசார், அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களைக் கொண்டு சோதனை நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.