×

ஊரடங்கால் நிறுத்தப்பட்ட மதுரை- போடி ரயில்பாதை அகலப்படுத்தும் சேவை மீண்டும் தொடக்கம்!

ஆனால் போதிய நிதி இல்லாததால் அந்த சேவை அப்படியே நிறுத்தப்பட்டது. மதுரையில் இருந்து தேனி மாவட்டத்தில உள்ள போடிக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்டு வந்த ரயில்சேவை மூலம் கேரளாவின் இடுக்கியில் விளையும் ஏலக்காய், காபி, தேயிலை ஆகிய பொருட்கள் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மதுரை – போடி மீட்டர்கேஜ் பாதை அகலப்படுத்த தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்டதாகவும், மீண்டும்
 

ஆனால் போதிய நிதி இல்லாததால் அந்த சேவை அப்படியே நிறுத்தப்பட்டது. 

மதுரையில் இருந்து தேனி மாவட்டத்தில உள்ள போடிக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்டு வந்த ரயில்சேவை மூலம் கேரளாவின் இடுக்கியில் விளையும் ஏலக்காய், காபி, தேயிலை ஆகிய பொருட்கள் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மதுரை – போடி மீட்டர்கேஜ் பாதை அகலப்படுத்த தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்டதாகவும், மீண்டும் சேவை தொடங்கும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் போதிய நிதி இல்லாததால் அந்த சேவை அப்படியே நிறுத்தப்பட்டது. 

இதனையடுத்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்பாதையை அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டு, தீவிரமாக நடந்து வந்தது. அதில் மதுரை- உசிலம்பட்டி வரை 43 கி.மீ தூரம் அளவுக்கு பணி நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடந்தது. ஆனால் அதற்கு பிறகு கொரோனா வைரஸால் ஊரடங்கு போடப்பட்ட நிலையில், கடந்த 45 நாட்களாக இந்த பணி நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளதால், அகலபாதை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. அங்கு மண்ணைக் கொட்டி சீரமைக்கும் பணி இப்போது நடந்து வருகையில், மலைகளை குடைந்து பாதை அமைக்கும் பணி நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.