×

ஊரடங்கால் உணவின்றி உயிர் பிழைக்க தவிக்கும் சர்க்கஸ் தொழிலாளர்கள் மற்றும் வளர்ப்பு விலங்குகள்

தேசிய ஊரடங்கு காரணமாக திருவாடானை அருகே சில சர்க்கஸ் தொழிலாளர்கள் தங்கள் வளர்ப்பு விலங்குகளுடன் உணவின்றி தவித்து வருகின்றனர். திருவாடனை: தேசிய ஊரடங்கு காரணமாக திருவாடானை அருகே சில சர்க்கஸ் தொழிலாளர்கள் தங்கள் வளர்ப்பு விலங்குகளுடன் உணவின்றி தவித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி அருகேயுள்ள ஆண்டாவூரணி கிராமத்தில் 20 சர்க்கஸ் தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்து வருகின்றனர். அவர்களுடன் அவர்களது வளர்ப்பு பிராணிகளான ஒட்டகம், குதிரைகள், நாய்களும் உணவின்றி தவித்து வருகின்றன. அந்த
 

தேசிய ஊரடங்கு காரணமாக திருவாடானை அருகே சில சர்க்கஸ் தொழிலாளர்கள் தங்கள் வளர்ப்பு விலங்குகளுடன் உணவின்றி தவித்து வருகின்றனர்.

திருவாடனை: தேசிய ஊரடங்கு காரணமாக திருவாடானை அருகே சில சர்க்கஸ் தொழிலாளர்கள் தங்கள் வளர்ப்பு விலங்குகளுடன் உணவின்றி தவித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி அருகேயுள்ள ஆண்டாவூரணி கிராமத்தில் 20 சர்க்கஸ் தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்து வருகின்றனர். அவர்களுடன் அவர்களது வளர்ப்பு பிராணிகளான ஒட்டகம், குதிரைகள், நாய்களும் உணவின்றி தவித்து வருகின்றன. அந்த சர்க்கஸ் தொழிலாளர்கள் குழுவில் நான்கு பெண்கள், ஆறு சிறுவர்கள் உள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு நடைபெறும் திருவிழாக்களில் கூடாரம் அமைத்து சர்க்கஸ் சாகசங்களை அவர்கள் செய்து பிழைத்த வந்தனர்.

ஆனால் திடீரென கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் அந்த கிராமத்திலேயே சர்க்கஸ் தொழிலாளர்கள் முடங்கியிருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாடே ஊரடங்கால் அவதியுற்று வருவதால் இவர்களுக்கு பொதுமக்களும் உதவி செய்ய முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசு தங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் காத்துள்ளனர்.