×

உள்ளாட்சித் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை வழக்குகள் : முடித்து வைத்த நீதிமன்றம்

தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததன் பிறகு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவாகின. கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற்று, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடந்த 6 ஆம் தேதி பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து, முன்னரே அறிவிக்கப்பட்டதன் படி மேயர், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட
 

தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததன் பிறகு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவாகின.

கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற்று, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடந்த 6 ஆம் தேதி பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து, முன்னரே அறிவிக்கப்பட்டதன் படி மேயர், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் கடந்த 11 ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் வெளியானது. தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததன் பிறகு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவாகின. 

இன்று அந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தது. அதில் நீதிபதிகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று மனு அளித்திருந்தால் தான் அந்த வழக்குகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும், அவ்வாறு வழக்கு தொடரப்பட்டிருந்தால் தேர்தல் வழக்குதான் தொடர முடியும் என்றும் இந்த வழக்குகளை விசாரிக்க முடியாது என்றும் கூறி உள்ளாட்சித் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை வழக்குகளை முடித்து வைத்தனர்.