×

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி விருப்ப பாடம் தான் : அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதியதாக ஹிந்தி மற்றும் பிரெஞ்சு மொழியைத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டிய ராஜன் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வைத்தார். உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதியதாக ஹிந்தி மற்றும் பிரெஞ்சு மொழியைத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டிய ராஜன் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வைத்தார். அதற்கு திமுகவின் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்
 

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதியதாக ஹிந்தி மற்றும் பிரெஞ்சு மொழியைத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டிய ராஜன் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வைத்தார்.

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதியதாக ஹிந்தி மற்றும் பிரெஞ்சு மொழியைத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டிய ராஜன் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வைத்தார். அதற்கு திமுகவின் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தியைத் திணித்து தமிழ் மக்களின் உணர்ச்சியை மீண்டும் தூண்டும் அறிவிப்பை வெளியிட்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சருக்குக் கண்டனம் தெரிவித்து  உடனடியாக அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

இது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு இந்திய மொழி மற்றும் ஒரு உலக மொழி கற்பிக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியிருந்தார். அதன் படி தான், ஹிந்தி மற்றும் பிரெஞ்சு மொழிகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது மாணவர்களுக்குக் கட்டாய பாடம் அல்ல. விருப்ப பாடம் தான். ஹிந்தியைத் திணிக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. தமிழ் தான் தமிழக அரசின் உயிர் மூச்சு என்று தெரிவித்துள்ளார்.