×

உயிருக்கு போராடியபடி தண்டவாளத்தில் கிடந்த நபர்… தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயிலில் அடிபட்டு உயிருக்குப் போராடிய நபரை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் அனந்தபுரி ரயில் மீண்டும் அடிபடாமல் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியைச் சேர்ந்தவர் சுயம்பு (50). இவர் ரயிலில் அடிபட்டு இறந்துகிடப்பதாக ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து விசாரணை செய்வதற்காக சப் இன்ஸ்பெக்டர் மகேஷ்பாபு, சிறப்பு பிரிவு காவலர் பிலிப் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயிலில் அடிபட்டு உயிருக்குப் போராடிய நபரை
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயிலில் அடிபட்டு உயிருக்குப் போராடிய நபரை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் அனந்தபுரி ரயில் மீண்டும் அடிபடாமல் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம்  ஆரல்வாய் மொழியைச் சேர்ந்தவர் சுயம்பு (50). இவர் ரயிலில் அடிபட்டு இறந்துகிடப்பதாக ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து விசாரணை செய்வதற்காக சப் இன்ஸ்பெக்டர் மகேஷ்பாபு, சிறப்பு பிரிவு காவலர் பிலிப் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

ரயிலில் இறந்து கிடந்தவர் அருகே செல்லும்போது, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது. அந்த ரயில் சென்றபிறகு இறந்துகிடப்பவர் அருகில் செல்லலாம் என்று நினைத்து போலீசார் ஒதுங்கி நின்றனர். ரயிலின் முகப்பு விளக்கு இறந்து கிடப்பதாகக் கூறப்பட்டவர் மீது பட்டபோது, அவர் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் என்பதை சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் பாபு கண்டார். அவர் கிடக்கும் நிலையில் அனந்தபுரி ரயிலில் அடிபட வாய்ப்பு அதிகமாக இருப்பதையும் கண்டார். உடனடியாக தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடிச்சென்று இறந்து கிடந்தவரை தண்டவாளத்திலிருந்து இழுத்தார். உடன், அனந்தபுரி ரயில் அவர்களைக் கடந்து சென்றது.
இதன் பிறகு 108 ஆம்புலன்ஸை மகேஷ்பாபு அழைத்தார். சுயம்பு அடிபட்டுக் கிடக்கும் இடத்திற்கு ஆம்புலன்ஸ் வர முடியாது. ஒரு கி.மீ தூரம் அவரைத் தூக்கி வந்தால் மட்டுமே ஆம்புலன்ஸை அடைய முடியும் என்று கூறப்பட்டது. இதனால், சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் பாபு, சிறப்பு காவலர் பிலிப் இருவரும் சேர்ந்து சுயம்புவை ஒரு கி.மீ தூரத்துக்கு தூக்கிவந்து ஆம்புலன்சில் ஏற்றினர். உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ரயிலில் மோதி உயிருக்குப் போராடியவரை காப்பாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் சிறப்புக் காவலருக்கு போலீசாரும், சுயம்புவின் குடும்பத்தினர், ஊர் மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.