×

உண்மையில் அது சுஜித் இல்லையாம்… சோகத்தில் நடந்த தவறு!

சடலமாக மீட்கப்பட்ட சுஜித் பிரேத பரிசோதனைக்கு பிறகு பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டான். மணப்பாறை : சுஜித் என்று கூறப்பட்டு வேறு சிறுவன் புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருவது தெரியவந்துள்ளது. திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான். கடந்த யா நாட்களாக நடந்த இந்த மீட்பு போராட்டம் தோல்வியில் முடிந்தது. சடலமாக மீட்கப்பட்ட சுஜித் பிரேத
 

சடலமாக மீட்கப்பட்ட சுஜித் பிரேத பரிசோதனைக்கு பிறகு பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில்  நல்லடக்கம் செய்யப்பட்டான்.

மணப்பாறை : சுஜித் என்று கூறப்பட்டு வேறு சிறுவன் புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருவது தெரியவந்துள்ளது.  

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை  5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான்.  கடந்த யா  நாட்களாக நடந்த இந்த மீட்பு போராட்டம் தோல்வியில் முடிந்தது. சடலமாக மீட்கப்பட்ட சுஜித் பிரேத பரிசோதனைக்கு பிறகு பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில்  நல்லடக்கம் செய்யப்பட்டான். சுஜித்தின் மறைவை தாங்க முடியாத  மக்கள், #RIPSujith, #SujithWilson, #SorrySujith, #ripsurjeeth  ஆகிய  ஹேஷ்டேக்குகளை  இந்திய அளவில் டிரெண்டாக்கி தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர்.

இதுஒருபுறமிருக்க சுஜித்தின் டிக் டோக்  வீடியோ, புகைப்படங்கள் என்று கூறி சில புகைப்படங்களை பகிர்ந்தனர். உண்மையில் அது சுஜித் இல்லையாம். இந்த சோக தருணத்தில் செய்வதறியாது வேறு ஒரு சிறுவனின்  புகைப்படங்கள் வைரலாகி  இருப்பது தெரியவந்துள்ளது. 

குறிப்பு : (உண்மை தன்மை அறியாமல் மீடியா முதல் சாமானிய மக்கள் வரை பலரும் இதைப் பயன்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்)