×

உணவு வழங்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வழக்குப்பதிவு!

தன்னார்வலர்கள் தனியாக பொருட்கள் தர அரசு தடை விதித்து நேற்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது. ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யும் விதமாக அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் உதவி செய்து வருகின்றனர். ஆனால், தன்னார்வலர்கள் தனியாக பொருட்கள் தர அரசு தடை விதித்து நேற்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் தனியாக பொருட்கள் தருவதால் சமூக இடைவெளி பாதிக்கப்படுகிறது. அதனால்
 

 தன்னார்வலர்கள் தனியாக பொருட்கள் தர அரசு தடை விதித்து நேற்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யும் விதமாக அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் உதவி செய்து வருகின்றனர். ஆனால்,  தன்னார்வலர்கள் தனியாக பொருட்கள் தர அரசு தடை விதித்து நேற்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் தனியாக பொருட்கள் தருவதால் சமூக இடைவெளி பாதிக்கப்படுகிறது. அதனால் உதவ விரும்பும் நபர்கள் பொருளாக மாவட்ட ஆட்சியர்களிடமோ அல்லது மாநகராட்சி ஆணையரிடமோ கொடுக்கலாம். அரசின் உத்தரவை மீறி உணவு வழங்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

 அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதனை எதிர்த்து திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு. பி.வில்சன் வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.