×

உணவு தரம் குறித்து அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,500ஐ எட்டியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,500ஐ எட்டியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் படி உணவு பொருட்கள், பெட்ரோல், இறைச்சி, மீன், ஏடிஎம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற
 

இந்தியாவில் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,500ஐ எட்டியுள்ள நிலையில்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,500ஐ எட்டியுள்ள நிலையில்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் படி உணவு பொருட்கள், பெட்ரோல், இறைச்சி, மீன், ஏடிஎம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும், மக்களின் நலன் கருதி அம்மா உணவகம் மட்டும் வழக்கம் போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, சமூக இடைவெளி கடைபிடிக்கப் படுகிறதா என்றும் உணவு தரம், சமையலறை சுத்தமாக உள்ளதா.. மக்களுக்கு தேவையான பொருட்கள் இருப்பு இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அங்கு மக்களுக்கு வழங்கப்படும் பொங்கலை வாங்கி சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதே போல, கலங்கரை விளக்கம் அருகே இருக்கும் அம்மா உணவகத்திலும் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.