×

உட்கார்ந்திருந்தவர் மீது காரை ஏற்றிய 13 வயது சிறுமி! அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

திருப்பூரில் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்தவர் மீது கார் ஏறியது. இந்த காரை 13 வயது சிறுமிக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. திருப்பூர் புது ராமகிருஷ்ணா புரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி மணியன். இவர் பின்னலாடை நிறுவனத்தின் வாசல் அருகே அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார் திருப்பூரில் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்தவர் மீது கார் ஏறியது. இந்த காரை 13 வயது சிறுமிக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. திருப்பூர் புது ராமகிருஷ்ணா
 

திருப்பூரில் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்தவர் மீது கார் ஏறியது. இந்த காரை 13 வயது சிறுமிக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் புது ராமகிருஷ்ணா புரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி மணியன். இவர் பின்னலாடை நிறுவனத்தின் வாசல் அருகே அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்

திருப்பூரில் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்தவர் மீது கார் ஏறியது. இந்த காரை 13 வயது சிறுமிக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் புது ராமகிருஷ்ணா புரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி மணியன். இவர் பின்னலாடை நிறுவனத்தின் வாசல் அருகே அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் கார் ஒருவர் கார் ஓட்ட பழகியபடி இருந்துள்ளனர். அதை காந்தி மணியன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

திடீரென்று கார் அவர் மீது பாய்ந்து சுவற்றோடு மோதி நின்றது. உடனே காரில் இருந்து ஒருவர் இறங்கிவந்து என்ன ஆனது என்று பார்க்கிறார். காந்தி மணியன் காருக்கும் சுவற்றுக்கும் நடுவே சிக்கி அலறவே என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து ஓடி நிற்கிறார். அருகிலிருந்தவர்கள் எல்லோரும் ஓடிவந்து காரை நகர்த்தி, காந்தி மணியனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
நல்ல வேலையாக காந்தி மணியனுக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

காரை ஓட்டிவந்தது 13 வயது சிறுமி என்றும், அவருக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்தபோது இப்படி ஆகிவிட்டது என்றும் கூறப்படுகிறது. இது பற்றி புகார் அளித்தால் சிறுமி மீது மட்டுமின்றி பெற்றோர் மீதும் வழக்கு பாயும் என்பதால் போலீசில் புகார் அளிக்கவில்லையாம்.
காந்தி மணியனுக்குத் தேவையான முழு மருத்துவ உதவிகளையும் தாங்களே செய்துவிடுகிறோம், இழப்பீடு தருகிறோம் எனவே போலீசில் புகார் செய்ய வேண்டாம் என்று காரில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். இதை ஏற்று புகார் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான சிசிடிவி கேமரா வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.