×

உடல் நலக்குறைவால் உயிரிழந்த காளை… இறுதிச்சடங்குடன் அடக்கம் !

பொதுவாகப் பல கிராமங்களில் கோவில் காளைகளோ அல்லது வீட்டில் வளர்க்கப்பட்ட காளைகளோ மரணம் அடைந்தால் அதற்கு ஈம சடங்குகள் செய்து அடக்கம் செய்வர். பொதுவாகப் பல கிராமங்களில் கோவில் காளைகளோ அல்லது வீட்டில் வளர்க்கப்பட்ட காளைகளோ மரணம் அடைந்தால் அதற்கு ஈம சடங்குகள் செய்து அடக்கம் செய்வர். அதே போல, திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கைபட்டியிலும் உடல் நலம் குன்றி உயிரிழந்த காளையை ஊர்மக்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளனர். அந்த கிராமத்தில் வசித்து வரும்
 

பொதுவாகப் பல கிராமங்களில் கோவில் காளைகளோ அல்லது வீட்டில் வளர்க்கப்பட்ட காளைகளோ மரணம் அடைந்தால் அதற்கு ஈம சடங்குகள் செய்து அடக்கம் செய்வர்.

பொதுவாகப் பல கிராமங்களில் கோவில் காளைகளோ அல்லது வீட்டில் வளர்க்கப்பட்ட காளைகளோ மரணம் அடைந்தால் அதற்கு ஈம சடங்குகள் செய்து அடக்கம் செய்வர். அதே போல, திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கைபட்டியிலும் உடல் நலம் குன்றி உயிரிழந்த காளையை ஊர்மக்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளனர். 

அந்த கிராமத்தில் வசித்து வரும் ராஜா என்பவர் இந்த ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்தார். இந்த காளை பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய காளை இதுவாம். இந்த காளை கடந்த சில காலமாக வயது முதிர்வால் உடல்நலக் குறைவுடன் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் காளை உயிரிழந்துள்ளது. 

இதனையடுத்து காளை ஊர்மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது, மாடு பிடி வீரர்கள், ஊர்மக்கள் அனைவரும் காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், அனைத்து சடங்குகளும் முடிவடைந்து அப்பகுதியிலிருந்த தோட்டத்தில் காளை அடக்கம் செய்யப்பட்டது. இது ஊர்மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.