×

உடல் உறுப்புத் தானத்தில் தமிழகத்தில் முதலிடம் ! மூளைச்சாவடையும் அளவுக்கு ஏற்படும் விபத்தை தடுப்பது எப்போது?

உடல் உறுப்பு தானத்தில் 5வது ஆண்டாக தொடர்ந்து தமிழகம் முதலித்தை பெற்றுள்ளது. உடல் உறுப்பு தானத்தில் 5வது ஆண்டாக தொடர்ந்து தமிழகம் முதலித்தை பெற்றுள்ளது. தேசிய உடலுறுப்பு மற்றும் திசுமாற்று நிறுவனம் இதற்காக தமிழக அரசுக்கு விருது கொடுத்து பாராட்டி உள்ளது. தானமாகப் பெறப்பட்ட உடல் உறுப்புகளை அதிக அளவில் பயன்படுத்திய மாநிலம் என்ற புதிய தகுதியையும் பெற்றுள்ளது. 2008 முதல் 1,326 கொடையாளர்களிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. கொடையாளர்கள் மூலம், 7,783 உடல்
 

உடல் உறுப்பு தானத்தில் 5வது ஆண்டாக தொடர்ந்து தமிழகம் முதலித்தை பெற்றுள்ளது. 

உடல் உறுப்பு தானத்தில் 5வது ஆண்டாக தொடர்ந்து தமிழகம் முதலித்தை பெற்றுள்ளது. 

தேசிய உடலுறுப்பு மற்றும் திசுமாற்று நிறுவனம் இதற்காக தமிழக அரசுக்கு விருது கொடுத்து பாராட்டி உள்ளது. தானமாகப் பெறப்பட்ட உடல் உறுப்புகளை அதிக அளவில் பயன்படுத்திய மாநிலம் என்ற புதிய தகுதியையும் பெற்றுள்ளது.

2008 முதல் 1,326 கொடையாளர்களிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. கொடையாளர்கள் மூலம், 7,783 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. அதில் 4,712 உடல் உறுப்புகள், இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை ஆகும்.
கடந்த அக்டோபர் மாதம் வரையில் தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகங்களில் 89% உரிய நபர்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளன. தானமாகப் பெறப்பட்டவற்றில் 89% கல்லீரல்கள், 52% இதயங்கள் 47% இதய வால்வுகள், 31% நுரையீரல்கள் உரியவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வருடத்தில் 652 மூளைச் சாவுகள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன. இவர்களில், 431 நபர்களின் உடல் உறுப்புகளி குடும்பத்தினரின் அனுமதி பெற்று தானமாக பெறப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களை விடவும், தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய உடலுறுப்பு மற்றும் திசுமாற்று நிறுவனம் வழங்கும் விருதுகளும், பாராட்டுகளும் தானம் கொடுக்கும் மனம் படைத்த தமிழக மக்கள் அனைவருக்கும் உரியவைதான். 
எது எப்படி இருந்தாலும் விபத்துகள் அதிகமாக நிகழ்வதால்தான் மூளைச்சாவு நடைபெறுகிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. தானமாக பெறப்பட்டு இன்னொருவர் காப்பற்றப்பட்டாலும், அநியாய விபத்து காரணமாக அகால மரணம் ஏற்படுவதில் இங்கு யாருக்குமே உடன்பாடில்லை.