×

உடலில் உடைந்த ஊசி !காய்ச்சலுக்காகச் சென்றவருக்கு நேர்ந்த கொடுமை..மருத்துவமனையின் அலட்சியம்!

இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால், கடந்த 9 ஆம் தேதி அவர் வீட்டின் அருகே இருக்கும் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சென்று ஊசி போட்டுள்ளார். நாகை மாவட்டம், சீர்காழியில் உள்ள ஈசானி தெருவைச் சேர்ந்த பார்வதி என்பவர் தனது மகன் மற்றும் மருமகளோடு வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால், கடந்த 9 ஆம் தேதி அவர் வீட்டின் அருகே இருக்கும் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சென்று ஊசி போட்டுள்ளார். அவருக்குப் போட்ட ஊசி உடைந்து
 

இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால், கடந்த 9 ஆம் தேதி அவர் வீட்டின் அருகே இருக்கும் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சென்று ஊசி போட்டுள்ளார்.

நாகை மாவட்டம், சீர்காழியில் உள்ள ஈசானி தெருவைச் சேர்ந்த பார்வதி என்பவர் தனது மகன் மற்றும் மருமகளோடு வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால், கடந்த 9 ஆம் தேதி அவர் வீட்டின் அருகே இருக்கும் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சென்று ஊசி போட்டுள்ளார்.

அவருக்குப் போட்ட ஊசி உடைந்து பார்வதியின் உடலில் சிக்கியுள்ளது. ஆனால், அங்கிருந்த மருத்துவர்களும் செவிலியர்களும் அப்படி ஏதும் ஆகவில்லை என்று கூறி பார்வதியை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஊசி உள்ளேயே இருந்ததால் வீட்டிற்கு வந்த பிறகு பார்வதி வலியால் துடித்துள்ளார். 

அதனையடுத்து, அவரின் வீட்டிற்கே வந்து மருத்துவர்கள் பார்வதியைப் பரிசோதித்துள்ளனர். ஊசி இருக்கிறதா என்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில், அந்த உடைந்த ஊசி உடம்பின் ஆழத்தில் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதனால், ஆபரேஷன் செய்து தான் வெளியே எடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சீர்காழியில் ஆபரேஷனுக்கான போதிய வசதி இல்லாததால் அவர் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு ஊசியை வெளியே எடுக்கும் ஆபரேஷன் செய்ய அதிகப் பணம் தேவைப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். போதிய பண வசதி இல்லாததால், அறுவை சிகிச்சைக்கு உதவும் படி பார்வதி கோரிக்கை வைத்துள்ளார்.