×

உடனடியாக மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..

தமிழகம் முழுவதும் உள்ள மதுக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் பூரண மது விலக்கு அமலுக்கு வர வேண்டும் என்றும் பல தரப்பு மக்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர் தமிழகம் முழுவதும் உள்ள மதுக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் பூரண மது விலக்கு அமலுக்கு வர வேண்டும் என்றும் பல தரப்பு மக்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்றில்
 

தமிழகம் முழுவதும் உள்ள மதுக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் பூரண மது விலக்கு அமலுக்கு வர வேண்டும் என்றும் பல தரப்பு மக்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர்

தமிழகம் முழுவதும் உள்ள மதுக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் பூரண மது விலக்கு அமலுக்கு வர வேண்டும் என்றும் பல தரப்பு மக்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் அதிமுக தான் நிச்சயமாக வெற்றி பெரும் என்றும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை குறித்து ஆளுநரிடம் இருந்து அறிவிப்பு வரும் வரையில், அதனைப் பற்றி எதுவும் கூற முடியாது என்று கூறியுள்ளார். 

அதனைத் தொடர்ந்து, மது விலக்கு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், பூரண மது விலக்கை உடனடியாக செயல்படுத்தினால் கள்ளச்சாராயம் மீண்டும் உருவாகும், அதனால் படிப்படியாகப் பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.