×

‘உங்கள் மருமகனை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்’…ஜெயகோபாலை விமர்சித்த உயர்நீதி மன்றம்..!

கடந்த மாதம் சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் தவறி விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாமாக உயிரிழந்தார். கடந்த மாதம் சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் தவறி விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாமாக உயிரிழந்தார். பேனர் வைத்த ஜெயகோபாலை கைது செய்யும் படி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து, தலைமறைவான அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை 2 வாரத்திற்குப் பிறகு கிருஷ்ணகிரியில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். ஜெயகோபாலின் தரப்பில் ஜாமீன் கேட்டு நீதி மன்றத்தில்
 

கடந்த மாதம் சென்னை பள்ளிக்கரணை அருகே  பேனர் தவறி விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாமாக உயிரிழந்தார்.

கடந்த மாதம் சென்னை பள்ளிக்கரணை அருகே  பேனர் தவறி விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாமாக உயிரிழந்தார். பேனர் வைத்த ஜெயகோபாலை கைது செய்யும் படி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து, தலைமறைவான அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை 2 வாரத்திற்குப் பிறகு கிருஷ்ணகிரியில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். ஜெயகோபாலின் தரப்பில் ஜாமீன் கேட்டு நீதி மன்றத்தில் மனு அளிக்கப் பட்டிருந்தது. அந்த மனுவைச் சென்னை உயர்நீதி மன்றம் இன்று விசாரித்தது.

 

அதில், உங்கள் மருமகனை வரவேற்க மற்றொரு உயிரைக் கொன்று விட்டீர்கள் என்று உயர்நீதி மன்றம் ஜெயகோபாலை சாடியுள்ளது. அதன் பின் ஜெயகோபால், சுபஸ்ரீயின் மரணத்திற்கு நான் காரணமல்ல என்று கூறியுள்ளார். அதற்கு நீதிபதிகள், சுபஸ்ரீயின் மரணத்திற்குக் காரணம் இல்லை எனக் கூறும் நீங்கள் ஏன் இத்தனை நாள் சரணடையாமல் தலைமறைவாக இருந்தீர்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.

அதற்கு ஜெயகோபால், மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக வெளியூர் சென்றிருந்தேன் என்று கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து, அரசுத் தரப்பில் சுபஸ்ரீ வழக்கு குறித்து மனுத் தாக்கல் செய்யக் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. அதனால், உயர்நீதி மன்ற நீதிபதிகள் இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.