×

‘உங்க காதலர் கூட சேர்த்து வைக்கிறோம்’ : அரசு ஆசிரியையை ஏமாற்றிக் கடத்தி சென்று பணம் பிடுங்கிய கும்பல்!

நான் ஆசாத்தின் நண்பர் மதன் பேசுகிறேன். உடனே கிளம்பி அருகில் உள்ள ஓட்டலுக்கு வாருங்கள். நான் உங்க காதலனுடன் உங்களைச் சேர்த்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார். கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சசிகலாவின் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் அவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கு பல்லடம் பகுதியைச் சேர்ந்த ஆசாத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்கள் இருவரும் காதலித்துள்ளனர்.
 

நான் ஆசாத்தின் நண்பர் மதன் பேசுகிறேன். உடனே கிளம்பி அருகில் உள்ள ஓட்டலுக்கு வாருங்கள். நான் உங்க காதலனுடன் உங்களைச் சேர்த்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சசிகலாவின் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் அவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கு பல்லடம் பகுதியைச் சேர்ந்த ஆசாத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். அதன் பின்னர் சசிகலா ஆசாத்திடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு ஆசாத்தும் ஒப்புக் கொண்டுள்ளார். 

இதனிடையே கடந்த 1 ஆம் தேதி சசிகலாவிற்கு போன் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், “நான் ஆசாத்தின் நண்பர் மதன் பேசுகிறேன். உடனே கிளம்பி அருகில் உள்ள ஓட்டலுக்கு வாருங்கள். நான் உங்க காதலனுடன் உங்களைச் சேர்த்து வைக்கிறேன்” என்று கூறியுள்ளார். அதனை நம்பிய சசிகலா ஆசாத்திடம் கூட அதைப்பற்றிக் கேட்காமல் உடனே அந்த ஹோட்டலுக்கு கிளம்பிச் சென்றுள்ளார். 

அங்கு செல்போனில் பேசிய மதன் வந்து காரில் ஏறச் சொல்லியுள்ளார். சசிகலாவும் காரில் ஏறியுள்ளார். அதன் பின்னர், காரில் ஆசாத் இல்லாததால் சசிகலா கத்த ஆரம்பித்துள்ளார். ஆனால், காரை வேகமாக ஓட்டிக் கொண்டு சசிகலாவையும் கடத்திக் கொண்டு மதனும் அவர் நண்பர்களும் சென்றுள்ளனர். அதன் பின்னர், சசிகலாவிடம் இருந்து ரூ. 1 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு ஏற்றிய இடத்திலேயே இறக்கி விட்டுள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த சசிகலா, அந்த நபர்கள் மீது திருமுருகன் பூண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  அந்த புகாரின் பேரில், மதனையும் அவரது நண்பர்கள் இரண்டு  பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.