×

ஈஷா பசுமை பள்ளி சார்பில் 3,000 மரக்கன்றுகள் வழங்கும் விழா.. முறையாகப் பராமரிப்போம் என்று மாணவர்கள் உறுதிமொழி !

இந்த பசுமை பள்ளி மூலம் ஆண்டுதோறும் லட்சக் கணக்கான மரங்கள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டும் வருகின்றன. ஈஷா அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திட்டமான ஈஷா பசுமை கரங்கள் தமிழகத்தில் உள்ள பசுமையை 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த பசுமை பள்ளி மூலம் ஆண்டுதோறும் லட்சக் கணக்கான மரங்கள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டும் வருகின்றன. இதற்கு, தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள், அரசு மற்றும் தனியார்ப் பள்ளியில்
 

இந்த பசுமை பள்ளி மூலம் ஆண்டுதோறும் லட்சக் கணக்கான மரங்கள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டும் வருகின்றன.

ஈஷா அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திட்டமான ஈஷா பசுமை கரங்கள் தமிழகத்தில் உள்ள பசுமையை 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த பசுமை பள்ளி மூலம் ஆண்டுதோறும் லட்சக் கணக்கான மரங்கள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டும் வருகின்றன.

இதற்கு, தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள், அரசு மற்றும் தனியார்ப் பள்ளியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் எனப் பலரும் இதில் இணைந்து அவர்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். இதுவரை 3.3 கோடி மரங்கள் இந்த பசுமை பள்ளியின் மூலம் நடப்பட்டுள்ளன. 

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் அரசுப் பள்ளியில் ஈஷா பசுமைப் பள்ளி இயக்கத்தின் மூலம் பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட 3000 மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. முனுசாமி கலந்து கொண்டார். அதில் முனுசாமி மரக்கன்றுகளை வழங்கினார். அதனையடுத்து, வழங்கப்பட்ட மரக்கன்றுகளை மாணவர்கள், பள்ளியிலும் அவர்களது இல்லத்திலும் நட்டு அதனை முறையாகப் பராமரிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.