×

இளைஞர்களின் அரசியல் நாயகன் சீமான்! அண்ணனின் பிறந்த நாளை கொண்டாடும் தம்பிகள்!!  #HBDSeemanAnna 

‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் 53 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் 53 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய இளைஞர்களின் அரசியல் ஞானத்துக்கு ஏற்ப கருத்துக்களை பேசி, பேச்சுக்காகவே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வசப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநராக பயணத்தை தொடங்கிய சீமான், ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தை முதன் முதலில் இயக்கினார். அதன்பிறகு மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடிகராக நடித்தார். சினிமாவிலிருந்து
 

‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் 53 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் 53 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

இன்றைய இளைஞர்களின் அரசியல் ஞானத்துக்கு ஏற்ப கருத்துக்களை பேசி, பேச்சுக்காகவே தனக்கென  ஒரு ரசிகர் கூட்டத்தை வசப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநராக பயணத்தை தொடங்கிய சீமான்,  ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தை முதன் முதலில் இயக்கினார்.

அதன்பிறகு மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடிகராக நடித்தார். சினிமாவிலிருந்து மெல்ல அரசியலுக்கு எட்டிப்பார்த்த அவர், இன்று திராவிட கட்சிகளின் வாக்குகளை உடைக்கக்கூடிய அளவிற்கு வளர்ந்துள்ளார். சிபா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தலைமையேற்று நடத்தி வருகிறார். 

தமிழ் இனம், ஈழத்தமிழர் பிரச்னை, தமிழ்த் தேசியம் என்பது சீமானின் உயிர் மூச்சு. தமிழ்நாட்டை தமிழரே  ஆள வேண்டும் என்ற கொள்கையுடையவர் சீமான். இதனால் தான் கமலுக்கு ஆதரவாளராகவும், ரஜினிக்கும் எதிர்பாளராகவும் வலம்வருகிறார். 

சீமானின் சில கருத்துக்கள், விமர்சனத்துக்கும் கேலிக்கும் மீம்ஸ்களுக்கும் உள்ளாக்கப்பட்டன. இருப்பினும் யாருக்காகவும், எதற்காகவும் தன் குணத்தை மாற்றிக்கொள்ளாத சீமான் இன்று வெளியாகியுள்ள மிக மிக அவசரம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். “என் மக்களை நம்பி என் கருத்தியலை நான் விதைக்கிறேன்.. முளைத்தால் மரம்.. இல்லையேல் மண்ணுக்கு உரம்” என்ற மனப்பான்மைக் கொண்ட சீமான், ஒரு நாளும் சந்தர்ப்பவாத அரசியலை கையிலெடுக்காதவர் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

ஆளுங்கட்சியை பற்றியும், மத்திய அரசை பற்றியும், ரஜினிகாந்தை பற்றியும் வசைப்பாடும் சீமானின் வெறித்தனமான பேச்சால் ஈர்க்கப்பட்ட பல இளைஞர்கள் இன்றும் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர். 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிறந்த நாளையொட்டி, அவரது தம்பிகள் #HBDSeemanAnna என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.