×

‘இளைஞர் உடலின் எலும்பு பகுதியில் சிக்கிய உடைந்த ஊசி’ : தொடரும் மருத்துவமனைகளின் அவலம் !

ஊசி ஏதேனும் ஆகி விட்டதா என்று மருத்துவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு மருத்துவர்கள் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சமாளித்து அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தம்பிதுரை. இவர் கடந்த 22 ஆம் தேதி காய்ச்சலின் காரணமாக வீட்டின் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டைபாய்டு இருப்பதை உறுதி செய்துள்ளனர். அதனால், அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் செவிலியர் தம்பிதுரைக்கு ஊசி போட்டுள்ளார். அவர் போட்ட ஊசி
 

ஊசி ஏதேனும் ஆகி விட்டதா என்று மருத்துவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு மருத்துவர்கள் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சமாளித்து அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். 

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தம்பிதுரை. இவர் கடந்த 22 ஆம் தேதி காய்ச்சலின் காரணமாக வீட்டின் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டைபாய்டு இருப்பதை உறுதி செய்துள்ளனர். அதனால், அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் செவிலியர் தம்பிதுரைக்கு ஊசி போட்டுள்ளார். அவர் போட்ட ஊசி உடைந்து தம்பிதுரையின் உடலில் சிக்கியுள்ளது. தம்பிதுரைக்குப் பயங்கர வலி ஏற்பட்டதால், ஊசி ஏதேனும் ஆகி விட்டதா என்று மருத்துவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு மருத்துவர்கள் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சமாளித்து அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். 

இதனையடுத்து, வலியால் துடித்த தம்பிதுரை எக்ஸ்-ரே எடுத்து பார்த்துள்ளார். அதில், அவருக்குப் போடப்பட்ட ஊசி 9 மில்லிமீட்டர் அளவிற்கு அவரின் உடலின் எலும்புப்பகுதியில் சிக்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து மீண்டும் அந்த மருத்துவமனையிடம் அவர் கேட்ட போது அவர்கள் சரியாகப் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது, அவர் உடைந்து உடலில் சிக்கியுள்ள ஊசியை வெளியே எடுக்கக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

ஏற்கனவே, நாகை மாவட்டம் சீர்காழியில் வசித்து வரும் பார்வதி என்னும் பெண், காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்குப் போட்ட ஊசி இதே போன்று அவர் உடலில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.