×

இலவசமாகவே 15,000 பிரசவம் பார்த்த நரசம்மா! வியக்கவைக்கும் 98 வயது பாட்டி 

கர்நாடக மாநிலத்தின் பாலகடா தாலுகாவில் இருக்கிறது கிருஷ்ணாபுரம் கிராமம்.அந்த ஊரில் மட்டுமல்ல அதன் சுற்றுப்புற கிராமங்களில் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு காலம் பிரசவித்த அத்தனை பெண்களுக்கும் பண்டுதம் பார்த்தவர் நரசம்மா.சாதாரண நரசம்மா அல்ல சுலகாட்டி நரசம்மா. கர்நாடக மாநிலத்தின் பாலகடா தாலுகாவில் இருக்கிறது கிருஷ்ணாபுரம் கிராமம்.அந்த ஊரில் மட்டுமல்ல அதன் சுற்றுப்புற கிராமங்களில் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு காலம் பிரசவித்த அத்தனை பெண்களுக்கும் பண்டுதம் பார்த்தவர் நரசம்மா.சாதாரண நரசம்மா அல்ல சுலகாட்டி நரசம்மா. சுலகாட்டி என்கிற கன்னடச்
 

கர்நாடக மாநிலத்தின் பாலகடா தாலுகாவில் இருக்கிறது கிருஷ்ணாபுரம் கிராமம்.அந்த ஊரில் மட்டுமல்ல அதன் சுற்றுப்புற கிராமங்களில் கிட்டத்தட்ட  முக்கால் நூற்றாண்டு காலம் பிரசவித்த அத்தனை பெண்களுக்கும் பண்டுதம் பார்த்தவர் நரசம்மா.சாதாரண நரசம்மா அல்ல சுலகாட்டி நரசம்மா.

கர்நாடக மாநிலத்தின் பாலகடா தாலுகாவில் இருக்கிறது கிருஷ்ணாபுரம் கிராமம்.அந்த ஊரில் மட்டுமல்ல அதன் சுற்றுப்புற கிராமங்களில் கிட்டத்தட்ட  முக்கால் நூற்றாண்டு காலம் பிரசவித்த அத்தனை பெண்களுக்கும் பண்டுதம் பார்த்தவர் நரசம்மா.சாதாரண நரசம்மா அல்ல சுலகாட்டி நரசம்மா.

சுலகாட்டி என்கிற கன்னடச் சொல்லின் பொருள் ‘ பிரசவம் பார்ப்பவர்’.நரசம்மாவின்  குரு அவருடைய பாட்டி மார்கம்மா.20 வயதில் இருந்து மார்கம்மாவின் உதவி ஆளாகச் சென்று மருத்துவம் கற்றிருக்கிறார். நரசம்மாவுகே 12 குழந்தைகள், அதில் 5 குழந்தைகள் பிறக்கும்போது மருத்துவச்சியாக இருந்தவர் பாட்டி மார்க்கம்மாதான்.

கிருஷ்ணாபுரத்துக்கு வரும் நாடோடி மக்களுக்கு எப்போதும் நரசம்மாதான் அடைக்கலம்.அவர்களிடம் இருந்து பல பச்சிலை மருந்துகள் கற்றுக்கொண்டாராம்.அவர்கள்,இவருக்காக  மூலிகைகள் சேகரித்து வந்து தருவார்களாம்.கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியம்,அதன் தலை இருக்கும் விதம் போன்றவற்றை துல்லியமாக கணித்து விடுவாராம்.

98 வருடம் வாழ்ந்த நரசம்மா கடைசி வரை கண்ணாடி அணிந்ததே இல்லை.வேற்கடலையும் கேள்வரகு,சோளம்,கம்பு,சாமை போன்ற சிறுதானியங்களை மட்டுமே விரும்பி உண்பாராம்.

பிரபல கன்னட எழுத்தாளர்களான  பா.ஹா.ராமகுமாரியும்,அன்னபூர்ணா வேங்கடநஞ்சப்பாவும் இவரை பற்றி எழுதிய பிறகுதான் உலகுக்கு நரசிம்மாவை தெரியவந்தது. 2014-ம் ஆண்டு,அதாவது அவர் பிரசவம் பார்க்கத் துவங்கி முக்கால் நூற்றாண்டு கழித்து தும்கூர் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்ட்டர் பட்டம் வழங்கியது.சுலகாட்டி நரசம்மா டாக்டர் நரசம்மா ஆனார்.அவருக்கு இந்திய.குடியரசுத்தலைவர் 2018ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கினார்.

அதே ஆண்டு நரசமா மறைந்தார்.நரசம்மா தனது 12 மக்களையும் 24 பேரப்பிள்ளைகளை மட்டும் விட்டுப்போகவில்லை. தனது கடைசி மகள் உட்பட,180 சீடர்களுக்கு தன் தொழில் ரகசியங்களை கற்றுக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறது இந்த தேவதை.