×

இலவச மருத்துவ சேவையை வரதட்சணையாக கேட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி! – நெகிழும் கிராம மக்கள்

நெல்லை மாவட்டத்தில் பயிற்சி கலெக்டராக இருப்பவர் சிவகுரு பிரபாகரன்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்த இவர்,கடினமாக படித்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார்.ஐ.ஏ.எஸ் ஆனதால் இவருக்கு திருமணத்துக்கு ஐ.ஆர்.எஸ், ஐ,ஏ.எஸ், ஐ.பி.எஸ் பெண் அதிகாரிகள் வரன் வந்தது. நெல்லை பயிற்சி கலெக்டர், தான் பிறந்த கிராமத்தில் வாரத்துக்கு இரண்டு நாட்கள் இலவச மருத்துவ சேவை அளிக்க வேண்டும் என்ற வரதட்சணையுடன் மருத்துவரை திருமணம் செய்துகொண்டது வரவேற்பைப் பெற்றுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பயிற்சி கலெக்டராக இருப்பவர்
 

நெல்லை மாவட்டத்தில் பயிற்சி கலெக்டராக இருப்பவர் சிவகுரு பிரபாகரன்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்த இவர்,கடினமாக படித்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார்.ஐ.ஏ.எஸ் ஆனதால் இவருக்கு திருமணத்துக்கு ஐ.ஆர்.எஸ், ஐ,ஏ.எஸ், ஐ.பி.எஸ் பெண் அதிகாரிகள் வரன் வந்தது.

நெல்லை பயிற்சி கலெக்டர், தான் பிறந்த கிராமத்தில் வாரத்துக்கு இரண்டு நாட்கள் இலவச மருத்துவ சேவை அளிக்க வேண்டும் என்ற வரதட்சணையுடன் மருத்துவரை திருமணம் செய்துகொண்டது வரவேற்பைப் பெற்றுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பயிற்சி கலெக்டராக இருப்பவர் சிவகுரு பிரபாகரன்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்த இவர்,கடினமாக படித்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார்.ஐ.ஏ.எஸ் ஆனதால் இவருக்கு திருமணத்துக்கு ஐ.ஆர்.எஸ், ஐ,ஏ.எஸ், ஐ.பி.எஸ் பெண் அதிகாரிகள் வரன் வந்தது.ஆனால் அவற்றை எல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்ட சிவகுரு திருமணம் செய்தால் மருத்துவர் ஒருவரைத்தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக கூறிவிட்டார்.

இதனால், மருத்துவம் படித்த பெண்களைத் தேடி சிவகுருவின் பெற்றோர் அலைந்தனர்.ஐ.ஏ.எஸ் மாப்பிள்ளை என்பதால் பல மருத்துவ பெண்கள் வரன் இவருக்கு கிடைத்தது.ஆனால், சிவகுருவின் கட்டுப்பாட்டைக்கேட்டு அனைவரும் ஓட்டம் பிடித்துள்ளனர். 
தான் பிறந்த கிராம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு வாரத்துக்கு இரண்டு நாட்களாவது இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே சிவகுரு கேட்ட வரதட்சணை. பல பெண்களும் இது சரிபட்டு வராது என்று சிவகுருவை நிராகரித்துவிட்டனர். 
கடைசியில் சென்னை நந்தனம் கல்லூரியில் கணித பேராசிரியரின் மகள் வாரத்துக்கு இரண்டு நாட்கள் கிராம மக்களுக்கு சேவை செய்யத் தயார் என்று உறுதி அளித்தார்.இந்த சேவை உறுதிமொழியை வரதட்சணையாக பெற்ற சிவகுருவுக்கும் டாக்டர் கிருஷ்ண பாரதிக்கும் கடந்த 26ம் தேதி திருமணம் நடந்தது.
படித்து முடித்ததும் பலர் தங்கள் ஊரைவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறிவிடுகின்றனர்.ஆனால், தன்னுடைய கிராம மக்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்த சிவகுருவை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.