×

இலவச தடுப்பூசி குறித்த பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு!

மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு வரவேற்கதக்கது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75% மத்திய அரசு கொள்முதல் செய்து அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து, தடுப்பூசி கொள்கையில் முந்தைய நிலையை மாற்றிக்கொண்டதற்காக பிரதமரின் நிலைபாட்டை பாராட்டுகிறேன்.
 

மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு வரவேற்கதக்கது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75% மத்திய அரசு கொள்முதல் செய்து அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து, தடுப்பூசி கொள்கையில் முந்தைய நிலையை மாற்றிக்கொண்டதற்காக பிரதமரின் நிலைபாட்டை பாராட்டுகிறேன். தடுப்பூசியின் பதிவு, தடுப்பூசி செலுத்துவது, நிர்வகிக்கும் உரிமையை ஒவ்வொரு மாநிலத்திற்கும் முழுமையான கட்டுப்பாடு வழங்கினால் பொருத்தமாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.