×

இலங்கை குண்டு வெடிப்பு: சென்னையில் திட்டமிடப்பட்டதா? ஒருவர் கைது!

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் குறித்து சென்னையில் நடைபெற்ற காவல்துறை தேடுதல் வேட்டையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் குறித்து சென்னையில் நடைபெற்ற காவல்துறை தேடுதல் வேட்டையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களை அடுத்து, அதனுடன் தொடர்புடைய நபர்கள் தமிழகத்தில் தங்கியிருக்கின்றார்களா என்ற கோணத்தில் என்.ஐ.ஏ எனப்படும்
 

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் குறித்து சென்னையில் நடைபெற்ற காவல்துறை தேடுதல் வேட்டையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் குறித்து சென்னையில் நடைபெற்ற காவல்துறை தேடுதல் வேட்டையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களை அடுத்து, அதனுடன் தொடர்புடைய நபர்கள் தமிழகத்தில் தங்கியிருக்கின்றார்களா என்ற கோணத்தில் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவு  விசாரணை மேற்கொண்டு வருகிறது

இந்த நிலையில், சென்னை குன்றத்தூர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையைச் சேர்ந்த சிலர் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருப்பதாக என்.ஐ.ஏ.வுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அவர்களது சோதனையில் இலங்கையைச் சேர்ந்த சிலர் அங்கிருப்பது தெரியவந்தது. அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் உரிய விசா வைத்திருந்தனர்.

விசா இன்றி தங்கியிருந்த நபரை அதிகாரிகள் விசாரித்தபோது, அவரது பெயர் ரோசன் என்பதும் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக விசா இன்றி சென்னையில் அவர் தங்கியிருப்பதும் தெரியவந்தது.

தான் ஒரு கொலை வழக்கில் சிக்கியிருப்பதாகவும் அதிலிருந்து தப்பிப்பதற்காக சென்னை வந்ததாகவும் அந்த நபர் தெரிவித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த நபரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்து 300 பேருக்கு மேல் பலியாகியிருக்கும் நிலையில், சென்னையில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.