×

இறந்து 3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடல்…பாதை பிரச்னையால் நிகழ்ந்த கொடுமை!

இதனால் இறந்த கான்டீபனின் உடல் குளிரூட்டப்பட்ட பெட்டியிலேயே வைக்கப்பட்டிருந்தது. சிவகங்கை மாவட்டம் மணலூர் கிராமத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த காண்டீபன் என்பவர் கடந்த 20ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல பொதுவழியை பயன்படுத்தக்கூடாது என்று அங்கிருந்த மற்ற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இறந்த கான்டீபனின் உடல் குளிரூட்டப்பட்ட பெட்டியிலேயே வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மணலூர் கிராமத்தில் உள்ள பொது மயானத்திற்கு மேலத் தெருவிலிருந்து ஜோதிபுரம் வழியாக இறந்தவரின் சடலத்தைக்
 

இதனால்  இறந்த கான்டீபனின்  உடல் குளிரூட்டப்பட்ட பெட்டியிலேயே  வைக்கப்பட்டிருந்தது.

சிவகங்கை மாவட்டம்  மணலூர் கிராமத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த காண்டீபன் என்பவர் கடந்த 20ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல பொதுவழியை பயன்படுத்தக்கூடாது என்று அங்கிருந்த  மற்ற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்  இறந்த கான்டீபனின்  உடல் குளிரூட்டப்பட்ட பெட்டியிலேயே  வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மணலூர் கிராமத்தில் உள்ள பொது மயானத்திற்கு மேலத் தெருவிலிருந்து ஜோதிபுரம் வழியாக  இறந்தவரின் சடலத்தைக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அதற்கு போலீஸ் உரிய முறையில்  பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில்  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், பிரச்னைக்குரிய பொதுப்பாதை வழியாக உடலை எடுத்துச்செல்ல மறுப்பு  தெரிவித்தார். மேலும் உடலை மேலத்தெரு வழியாக மயானத்திற்குக் கொண்டு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டார்.  நீதிமன்ற உத்தரவின் படி இறந்த காண்டீபனின் உடல், மூன்று நாட்களுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது.