×

இறந்த தந்தை: இறுதி சடங்கிற்கு செல்ல முடியாமல் தவித்த மாற்றுத்திறனாளி பெண்!

மாரீசுவரன் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் நிலையில் ஊரடங்கு காரணமாக கே.டி.சி நகருக்கு வந்துள்ளனர். நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் மாரீசுவரன். இவரது மனைவி விக்னேஷ்வரி. இந்த தம்பதிக்கு வாய் பேச முடியாது, காது கேட்கும் திறனும் கிடையாது. மாரீசுவரன் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் நிலையில் ஊரடங்கு காரணமாக கே.டி.சி நகருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் விக்னேஷ்வரியின் தந்தை செண்பகம், தென்காசி செங்கோட்டையில் நேற்று உடல் நலக்குறைவால் திடீரென்று இறந்தார். இதனால் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள விக்னேஷ்வரி-
 

மாரீசுவரன் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் நிலையில் ஊரடங்கு காரணமாக கே.டி.சி நகருக்கு வந்துள்ளனர்.

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் மாரீசுவரன்.  இவரது மனைவி விக்னேஷ்வரி. இந்த தம்பதிக்கு வாய் பேச முடியாது, காது கேட்கும் திறனும் கிடையாது.  மாரீசுவரன் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் நிலையில் ஊரடங்கு காரணமாக கே.டி.சி நகருக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் விக்னேஷ்வரியின் தந்தை செண்பகம், தென்காசி செங்கோட்டையில் நேற்று உடல் நலக்குறைவால் திடீரென்று இறந்தார்.  இதனால் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள விக்னேஷ்வரி- மாரீசுவரன்தம்பதி புறப்பட்டுள்ளனர். ஆனால் ஊரடங்கால் வாகனங்கள் இல்லாததால் காரில் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து காரில் செல்ல வகையில் அனுமதி பெறுவதற்காக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அவர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனாலும் அவர்களுக்கு உரிய அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதை தொடர்ந்து இந்த  தம்பதி சமூக ஆர்வலர்கள் உதவியுடன், மாவட்ட உதவி கலெக்டர்  சிவகுரு பிரபாகரனை நேரில் சந்தித்து தங்களது நிலைமையை எடுத்துக் கூறினர்.

இதையடுத்து அவர், கலெக்டர் ஷில்பாவுடன் ஆலோசனை நடத்திய ஆலோசனையின் படி அவர்கள்  செங்கோட்டைக்கு செல்ல உரிய அனுமதி வழங்கப்பட்டது.

தந்தை இறுதி சடங்கிற்கு செல்ல முடியாமல் மகள் கண்ணீருடன்  அங்கும் இங்கும் அலைமோதிய சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.