×

இரவுப்பணியில் ஈடிபட்டிருந்த தலைமைக் காவலர் மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சி சம்பவம்!

அவர்களுள் பல பேர் இன்னும் கண்டறியப்படாத நிலையில், போலீசார் அவர்களை கண்டுபிடிக்க அயராது உழைத்து வருகின்றனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதிலருந்து மக்களை காக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. அதனை மக்கள் மீறுகிறார்களா என்று கண்காணிக்க நாடு முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள இச்சமயத்தில் காவலர்களும் மருத்துவர்களும் மக்களை காக்க உயிரை பணயம் வைத்து போராடி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா
 

அவர்களுள் பல பேர் இன்னும் கண்டறியப்படாத நிலையில், போலீசார் அவர்களை கண்டுபிடிக்க அயராது உழைத்து வருகின்றனர். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதிலருந்து மக்களை காக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. அதனை மக்கள் மீறுகிறார்களா என்று கண்காணிக்க நாடு முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள இச்சமயத்தில் காவலர்களும் மருத்துவர்களும் மக்களை காக்க உயிரை பணயம் வைத்து போராடி வருகின்றனர். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்த நிலையில், டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தப்லிகி ஜமாத் என்ற மாநாடு நடைபெற்றது. அதில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட மக்கள் அதிகம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுள் பல பேர் இன்னும் கண்டறியப்படாத நிலையில், போலீசார் அவர்களை கண்டுபிடிக்க அயராது உழைத்து வருகின்றனர். 

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள களம்பூர் காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணியாற்றி வந்த குப்பன் என்பவர் நேற்று இரவுப்பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென நெஞ்சு வலியால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.