×

இரண்டாவது நாளாக அதிரடி உயர்வு.. புதிய உச்சத்தில் தங்க விலை !

உச்சத்தை எட்டிய தங்க விலை ரூ.30,344க்கு விற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றும் தங்க விலை உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.30 ஆயிரத்தை எட்டியது. அதன் பின்னர் மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்த தங்க விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து கொண்டே வந்து ரூ.29,800க்கு மேல் விற்கப்பட்டு வந்தது. அதனால் மீண்டும் தங்க விலை உச்சத்தை எட்டி விடுமோ என்று மக்கள் அச்சத்தில் இருந்தனர். அதே போல,
 

உச்சத்தை எட்டிய தங்க விலை ரூ.30,344க்கு விற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றும் தங்க விலை உயர்ந்துள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.30 ஆயிரத்தை எட்டியது. அதன் பின்னர் மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்த தங்க விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து கொண்டே வந்து ரூ.29,800க்கு மேல் விற்கப்பட்டு வந்தது. அதனால் மீண்டும் தங்க விலை உச்சத்தை எட்டி விடுமோ என்று மக்கள் அச்சத்தில் இருந்தனர். அதே போல, நேற்று உச்சத்தை எட்டிய தங்க விலை ரூ.30,344க்கு விற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றும் தங்க விலை உயர்ந்துள்ளது. 

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,832க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.30,656க்கு விற்கப்படுகிறது. ஏற்கனவே உச்சத்தை எட்டிய தங்க விலை, அதனை வீழ்த்தி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.51.00க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.400 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.51,000க்கு விற்கப்படுகிறது.