×

இப்படித்தான் சுற்றுச் சூழலைப் பாது காப்பீங்களா… திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அவலம் !?

அரசியல்வாதிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு என்றே பொதுவான ஒரு இடத்தை எல்லா ஊர்களிலும் ஒதுக்கி வைத்திருப்பார்கள் அரசியல்வாதிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு என்றே பொதுவான ஒரு இடத்தை எல்லா ஊர்களிலும் ஒதுக்கி வைத்திருப்பார்கள்.அதுபோல், மரம் நடுவதற்கென்றே ஒரு இடத்தை ஒதுக்கி வச்சிருக்காங்களா என்று இயற்கை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அரங்கேறியிருப்பது திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்! ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச் சூழல் தினத்தன்று அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர் மர கன்றுகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவது வழக்கம்.அதே போல்தான்
 

அரசியல்வாதிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு என்றே பொதுவான ஒரு இடத்தை எல்லா ஊர்களிலும் ஒதுக்கி வைத்திருப்பார்கள்

அரசியல்வாதிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு என்றே பொதுவான ஒரு இடத்தை எல்லா ஊர்களிலும் ஒதுக்கி வைத்திருப்பார்கள்.அதுபோல், மரம் நடுவதற்கென்றே ஒரு இடத்தை ஒதுக்கி வச்சிருக்காங்களா என்று இயற்கை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் அரங்கேறியிருப்பது திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்! ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச் சூழல் தினத்தன்று அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர் மர கன்றுகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவது வழக்கம்.அதே போல்தான் திருவள்ளுவர் மாவட்டத்திலும் நடந்திருக்கிறது.

இதில் வேடிக்கை என்ன வென்றால்,கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில்தான் மர கன்றுகளை நட்டு மீடியாவுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்கள் இதுவரை இருந்த மூன்று ஆட்சியரும்! தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் மீடியா ஆட்கள் மூலம் இந்த செய்தி வெளியுலகுக்கு தெரிய வந்திருக்கிறது.
ஒவ்வொரு முறையும் மரம் நடுவதோடு சரி,அதன் பிறகு அதை ஒழுங்காக பராமரிக்கிறார்களா என்பதை எந்த ஆட்சியரும் கவனிக்கவில்லை.அதனால் பட்டுப்போன இடத்திலேயே அவர்களுக்கே தெரியாமல் அடுத்தடுத்து வந்த ஆட்சியர்கள் மர கன்று பட்டிருக்கிறார்கள்.
இந்த முறையாவது முறையாக பராமரித்து பாது காக்க வேண்டும் என்றும் அடுத்த ஆண்டு வேறொரு இடத்தில் மார கன்று நட்டுவைக்க முயற்சி எடுங்கள் என்றும் இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.