×

இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

அக்டோபர் 17 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது தமிழகத்தில் ஈரோடு, சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் வெப்பம் சலனம் காரணமாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்க சாத்திய கூறுகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அக்டோபர் 17 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
 

அக்டோபர் 17 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது

தமிழகத்தில் ஈரோடு, சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பம்  சலனம் காரணமாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்க  சாத்திய  கூறுகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அக்டோபர் 17 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி நேற்று இரவு முதலே சென்னையில் தேனாம்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், நுங்கம்பாக்கம்,கோடம்பாக்கம், ராமாபுரம், திருவல்லிக்கேணி,  கோயம்பேடு,  அண்ணா சாலை, சைதாப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, அடையாறு, 
 ராயப்பேட்டை மற்றும் புறநகர் பகுதிகளான  ஆலந்தூர், பரங்கிமலை, வேளச்சேரி, விருகம்பாக்கம்  இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. 

இந்நிலையில் தமிழகத்தில் ஈரோடு, சேலம், தருமபுரி உள்பட 9 மாவட்டங்களில்  இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.