×

இன்றிரவு 75 மேம்பாலங்கள் மூடப்படும்.. புத்தாண்டை முன்னிட்டு காவல்துறை அதிரடி நடவடிக்கை!

இந்த நியூ இயரை அசம்பாவிதங்கள் இல்லாத நியூ இயராக மாற்ற காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு சென்னை முழுவதும் ஒரே விழாக்கோலமாகக் காட்சியளிக்கும். குறிப்பாக மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் அதிக இளைஞர்களின் கூட்டமும், குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும். அதனால், புத்தாண்டு அன்று பல அசம்பாவிதங்கள் நடக்கும். இந்த நியூ இயரை அசம்பாவிதங்கள் இல்லாத நியூ இயராக மாற்ற காவல்துறையினர் அதிரடி
 

இந்த நியூ இயரை அசம்பாவிதங்கள் இல்லாத நியூ இயராக மாற்ற காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். 

புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு சென்னை முழுவதும் ஒரே விழாக்கோலமாகக் காட்சியளிக்கும். குறிப்பாக மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் அதிக இளைஞர்களின் கூட்டமும், குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும். அதனால், புத்தாண்டு அன்று பல அசம்பாவிதங்கள் நடக்கும். இந்த நியூ இயரை அசம்பாவிதங்கள் இல்லாத நியூ இயராக மாற்ற காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். 

இது குறித்துப் பேசிய கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, சென்னை கடற்கரைகளிலும் அதிகமாக மக்கள் கூடும் இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ரோந்து வாகனங்கள் அமைக்கப்படும். மதுபானம்  அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும். என்று தெரிவித்தார். 

இதனைப் பற்றிப் பேசிய மற்றொரு போலீஸ் அதிகாரி, “12 மணிக்குப் பின்னர் வாகனங்களில் செல்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். கடந்த ஆண்டு நியூ இயர் கொண்டாட்டம் என்ற பேரில் மோட்டார் சைக்கிள் ரேஸ் உள்ளிட்டவை நடத்தப்பட்டது. அதனால், இந்த ஆண்டு அவை அனைத்தையும் தடுக்கும் பொருட்டு சென்னையில் உள்ள 38 பெரிய மேம்பாலங்கள் உள்பட 75 மேம்பாலங்கள் மூடப்படும். இன்று இரவு மேம்பாலங்களில் செல்ல முடியாது.” என்று தெரிவித்தார்.