×

இனி இந்த நம்பருக்கு போன் செய்தால் மருந்து வீடு தேடி வரும்..!

ஊரடங்கு உத்தரவு தமிழகம், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன உலக நாடுகளை பயமுறுத்தி வரும் கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் இன்று வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தமிழகம், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடிகள், மருந்தகங்கள்
 

ஊரடங்கு உத்தரவு தமிழகம், ஒடிசா  உள்ளிட்ட பல மாநிலங்களில் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன 

உலக நாடுகளை பயமுறுத்தி வரும் கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் இன்று வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தமிழகம், ஒடிசா  உள்ளிட்ட பல மாநிலங்களில் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன 

 இருப்பினும்  அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடிகள், மருந்தகங்கள் போன்றவை தொடர்ந்து செயல்படும். இருப்பினும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்கும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. 

மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் காய்கறி அங்காடிகளை அறிமுகப்படுத்தியுள்ள அரசு தற்போது மருந்து பொருட்களை வீடுகளில் கொண்டு வந்து டெலிவரி செய்யும் முயற்சியை கையிலெடுத்துள்ளது.  

இதுகுறித்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், “பொதுமக்களுக்கு தேவையான மருந்துகளை வீடுகளுக்கே சென்று வழங்க ஏற்பாடு. மருத்துவர் அளித்த மருந்துச்சீட்டு வைத்திருந்தால் 18001212172 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைத்து ஆர்டர் செய்துக்கொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் முதியவர்கள் உள்பட பலரும் பயன்பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.