×

இனி 45 வயதான பெண்களுக்கும் அம்மா ஸ்கூட்டர்: தமிழக அரசின் புதிய விதிகள் இதோ!

இதற்கான வயது தகுதியாக 18 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும் போன்ற சில விதிமுறைகள் உள்ளது. அம்மா இருசக்கர வாகன திட்டம் என்ற பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பணிக்கு செல்லும் ஏழை மகளிருக்கான மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வசித்து வரும் பெண்கள் இந்த மானிய விலையிலான வாகனத்திற்கு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்பவர்கள், குறைந்த பட்சமாக 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இதற்கான வயது தகுதியாக
 

இதற்கான வயது தகுதியாக 18 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும் போன்ற சில விதிமுறைகள் உள்ளது.

அம்மா இருசக்கர வாகன திட்டம் என்ற பெயரில்  கடந்த 2018-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பணிக்கு செல்லும் ஏழை மகளிருக்கான மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வசித்து வரும் பெண்கள் இந்த மானிய விலையிலான வாகனத்திற்கு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்பவர்கள், குறைந்த பட்சமாக 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இதற்கான வயது தகுதியாக 18 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும் போன்ற சில விதிமுறைகள் உள்ளது.

இந்நிலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி இருசக்கர வாகனம் கேட்டு விண்ணப்பிக்கும் பயனாளிகள் இனிவரும் காலங்களில் 45 வயதுடையவராக இருக்க வேண்டும் என்று மாற்றப்படுகிறது. பயனாளி 8-ம் வகுப்பு தேர்வை எழுதியிருக்க வேண்டும் என்ற பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றில் பணிபுரியும் பெண்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர், மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், சமையல்காரர் மற்றும் உதவியாளர், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கடைகளில் பணியாற்றும் பெண்களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.