×

இந்தியாவை ஒன்றும் மோடிக்கு எழுதி கொடுக்கல- திருநாவுக்கரசர் காட்டம்

இந்தியாவை மோடிக்கு எழுதி கொடுக்கவில்லை மக்கள் அவருக்கு மேலும் 5 ஆண்டுகள் அவகாசம்தான் கொடுத்து உள்ளனர் என முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இந்தியாவை மோடிக்கு எழுதி கொடுக்கவில்லை மக்கள் அவருக்கு மேலும் 5 ஆண்டுகள் அவகாசம்தான் கொடுத்து உள்ளனர் என முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “காங்கிரஸ் பற்றி ரஜினி கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து, இந்தியாவை மோடிக்கு
 

இந்தியாவை மோடிக்கு எழுதி கொடுக்கவில்லை மக்கள் அவருக்கு மேலும் 5 ஆண்டுகள் அவகாசம்தான் கொடுத்து உள்ளனர் என முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவை மோடிக்கு எழுதி கொடுக்கவில்லை மக்கள் அவருக்கு மேலும் 5 ஆண்டுகள் அவகாசம்தான் கொடுத்து உள்ளனர் என முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  “காங்கிரஸ் பற்றி ரஜினி கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து, இந்தியாவை மோடிக்கு எழுதி கொடுக்கவில்லை. மக்கள் மேலும் 5 ஆண்டுகள் அவருக்கு அவகாசம்தான் கொடுத்து உள்ளார்கள். இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் ஆட்சிகள் மாறி மாறி தான் வருகிறது. அதற்காக தோற்றவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்வது சரியல்ல. மோடியின் 5 ஆண்டு ஆட்சியின்  தாக்கம் இருந்தது உண்மை தான். ஆனால் இந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்கிறோம், ஆனால் இது முழுவதும் மக்களின் தீர்ப்பா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்

பல லட்சம் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை, தேர்தல் தோல்வியின் காரணமாக ராஜினாமா செய்ய கூறுவது தவறு. ராகுல் காந்தி ஆற்றல் மிக்க அறிவான தலைவர் அவரே பதவியில் தொடர வேண்டும் என்பது காங்கிரஸின் எண்ணம். இரு கைகள் சேர்ந்தால் தான் ஓசை வரும் ஆகவே கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் உடன் சேர்ந்தால் தான் வெற்றி இலக்கை எட்டமுடியும், சில கட்சிகள் தனியாக தேர்தலில் நின்றார்கள் ஆனால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற கருத்தில் ஒற்றுமையாக தான் இருந்தார்கள்.

தமிழகத்தின் நலன் காக்க , பல்வேறு நல்ல திட்டங்களை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் தமிழகத்திற்கு கொண்டுவரும். அடுத்த 5 ஆண்டுகளில் ராகுல் பிரதமராக வருவார் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும்” என்று கூறினார்.