×

இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் அடுத்த 2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகச் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர் புவியரசன், ‘வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின்
 

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்

அடுத்த 2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகச் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்தது.  இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த  வானிலை மைய இயக்குநர் புவியரசன், ‘வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.  

குறிப்பாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் சென்னையைப்பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடனும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு  உள்ளதாகவும் தெரிவித்தார். அதன்படி இன்று காலை முதல் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.