×

ஆபாசப் படங்கள் பார்த்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் : ஏடிஜிபி ரவி அதிரடி !

இணைய தளங்களில் இருக்கும் ஆபாச தளங்களை முடக்கி விட்டதாகவும் எஞ்சியுள்ள தளங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். ஆபாசப் படங்கள் பார்ப்பவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என உள்துறை அமைச்சகம் தகவல் அனுப்பியது. அதன் படி, குழந்தைகள் மற்றும் பெண்கள் பற்றிய ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் நபர்களின் பட்டியலைத் தாயார் செய்து வந்தது. சமீபத்தில் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமில்லாமல், இது போன்ற
 

இணைய தளங்களில் இருக்கும் ஆபாச தளங்களை முடக்கி விட்டதாகவும் எஞ்சியுள்ள தளங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

ஆபாசப் படங்கள் பார்ப்பவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என உள்துறை அமைச்சகம் தகவல் அனுப்பியது. அதன் படி, குழந்தைகள் மற்றும் பெண்கள் பற்றிய ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் நபர்களின் பட்டியலைத் தாயார் செய்து வந்தது. சமீபத்தில் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார்.

அதுமட்டுமில்லாமல், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர்களின் பட்டியல்கள் தயாராகி வருவதாகவும் ஏடிஜிபி ரவி எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால், ஆபாசப் படம் பார்ப்பவர்கள் மற்றும் பதிவேற்றம் செய்பவர்கள் பீதியில் உள்ளனர். 

இந்நிலையில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏடிஜிபி ரவி, அங்குச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், இணைய தளங்களில் இருக்கும் ஆபாச தளங்களை முடக்கி விட்டதாகவும் எஞ்சியுள்ள தளங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, ஆபாசப் படங்கள் பார்ப்பவர்கள் ஏழை, பணக்காரன் என்ற பாரபட்சமின்றி கைது செய்யப்படுவர் என்றும் மாவட்டந்தோறும்  சைபர் கிரைம் காவல்நிலையங்கள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், போக்சோ வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வருவதைப் போல சைபர் கிரைம் நீதிமன்றங்கள் எதிர்காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.