×

ஆட்சியர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி : வேலூரில் பரபரப்பு!

வேலூர் அடுத்த மொனவூரை சேர்ந்த ஜெயந்திக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். சமீபத்தில் கந்து வெட்டி கொடுமை காரணமாக ரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து குடும்ப பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆங்காங்கே உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயலும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றன. இந்நிலையில் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின்
 

வேலூர் அடுத்த  மொனவூரை சேர்ந்த ஜெயந்திக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.

சமீபத்தில் கந்து வெட்டி கொடுமை காரணமாக ரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம்  பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து குடும்ப பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆங்காங்கே உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தீக்குளிக்க முயலும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றன. இந்நிலையில் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன், ஒரு பெண் தனது 3 குழந்தைகளுடன் தீ குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் அடுத்த  மொனவூரை சேர்ந்த ஜெயந்திக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவர் இன்று அந்த குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, திடீரென தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனே அதனைப் பார்த்த அதிகாரிகள் எந்த விபரீதமும் நிகழாமல் தடுத்துள்ளனர்.

அதன் பின்னர் ஜெயந்தியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஜெயந்தியை அவரது கணவர் சந்தேகப் படுவதாகவும் இந்த 3 குழந்தைகளும் அவருடையது இல்லை என்று கூறி தன்னை துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார். மேலும், இதன் காரணமாக அடிக்கடி சண்டை வருகிறது என்றும் இதற்கு இரு வழி காணத் தான் மருத்துவமனைக்கு வந்தேன் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து ஜெயந்தி அளித்த புகாரின் படி சத்துவாச்சாரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.