×

ஆசிரியர்கள் மற்றும் நீதிபதிகள் கடவுளுக்குச் சமமானவர்கள்: சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய.கே.தஹில் ரமானி திறந்து வைத்தார். சேலம் : தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதற்காகச் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதைச் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய.கே.தஹில் ரமானி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய.கே.தஹில் ரமானி திறந்து வைத்தார்.

சேலம் : தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதற்காகச் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதைச் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய.கே.தஹில் ரமானி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். 

அப்போது  பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘கடந்த 8 ஆண்டுகளில் தமிழக அரசு நீதித்துறைக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் நீதிபதிகள் கடவுளுக்குச் சமமானவர்கள்.  நீதித்துறையைக் கணினி மயமாக்க போதுமான நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது’ என்றார்.