×

அரசுப் பள்ளிகளில் இலவசமாக காலை உணவு? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்! 

பொங்கல் திருநாளில் தமிழக அரசு பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் பொங்கல் திருநாளில் தமிழக அரசு பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டை ஊக்கப்படுத்த அம்மா இளைஞா் விளையாட்டு அரங்கம் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறைக்கு வரும் 13ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து நாளை முதல்வருடன்
 

பொங்கல் திருநாளில் தமிழக அரசு பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

பொங்கல் திருநாளில் தமிழக அரசு பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டை ஊக்கப்படுத்த அம்மா இளைஞா் விளையாட்டு அரங்கம் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறைக்கு வரும் 13ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து நாளை முதல்வருடன் கலந்தோசித்து முடிவு அறிவிக்கப்படும்” எனக்கூறினார். 

கட்டாயக்கல்வி உாிமைச்சட்டத்தில் சில தனியாா் பள்ளிகளில் அரசின் இட ஒதுக்கீட்டின் படி மாணவா்கள் சோ்க்கை நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அவர், ஒருசில பள்ளிகளில் அது போல் உள்ளது அரசு விதிகளுக்குட்பட்டுள்ள அனைத்து பள்ளிகளிலும் உாிய நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது என்று கூறினார். 

அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என வதந்திகளை பரப்பி வருகிறாா்கள் எனக்கூறிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளில் காலை உணவு வழங்குவது குறித்து முதல்வா் இதுவரை எந்த கருத்தும் தொிவிக்கவில்லை. இது சமூக வளைதளங்களில் பரவிவரும் வதந்தியே தவிர உண்மை இல்லை” எனக் கூறினார்.