×

அரசுக்கு சொந்தமான இடத்தில் 100ற்கும் மேற்பட்ட கஞ்சா செடி…அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!

முறையான பராமரிப்பு இல்லாமல் இருக்கும் இடத்தை மதுஅருந்த பயன்படுத்திவருவதாகப் போலீசுக்கு தகவல் சென்றது திருச்சி மாநகராட்சி 50-வது வட்டத்தில் உள்ள தென்னூர் ஆழ்வார் தோப்பு அக்பர் தெருவில் மாநகராட்சிக்குச் சொந்தமான சுமார் 10 ஆயிரம் சதுர அடி காலி இடம் ஒன்று உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாமல் இருக்கும் இடத்தை மதுஅருந்த பயன்படுத்திவருவதாகப் போலீசுக்கு தகவல் சென்றது. மேலும் இங்கு சிலர் கஞ்சா செடியை வளர்த்து வருவதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற தில்லை நகர்
 

முறையான பராமரிப்பு இல்லாமல் இருக்கும் இடத்தை மதுஅருந்த பயன்படுத்திவருவதாகப் போலீசுக்கு தகவல் சென்றது

திருச்சி மாநகராட்சி 50-வது வட்டத்தில் உள்ள தென்னூர் ஆழ்வார் தோப்பு அக்பர் தெருவில் மாநகராட்சிக்குச் சொந்தமான சுமார் 10 ஆயிரம் சதுர அடி காலி இடம் ஒன்று உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாமல் இருக்கும் இடத்தை மதுஅருந்த பயன்படுத்திவருவதாகப் போலீசுக்கு தகவல் சென்றது. மேலும் இங்கு சிலர்  கஞ்சா செடியை வளர்த்து வருவதாகவும் கூறப்பட்டது. 

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற  தில்லை நகர் காவல் நிலைய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம்,  4,5 அடி உயரத்தில் 20-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் அங்கு வளர்ந்திருந்தன. மேலும் புதருக்குள் 100ற்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் 1 அடி  உயரத்திற்கு வளர்ந்திருந்தது.

இதை தொடர்ந்து ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு அவை அனைத்தும் அங்கிருந்து அகற்றப்பட்டது. இந்த செடிகள் இங்கு தானாக வளர வாய்ப்பில்லை என்பதால், செடிகளை வளர்த்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.