×

அரசு பேருந்துகளில் ‘சிசிடிசி கேமரா’.. வன்முறையைக் கண்காணிக்க காவல்துறையின் அதிரடி நடவடிக்கை!

மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் இன்று காவல் ஆணையரின் உத்தரவின் படி, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. பொதுவாகப் போராட்டங்களோ அல்லது ஆர்ப்பாட்டங்களோ நடக்கும் இடத்தில் மக்கள் அரசின் மீது இருக்கும் கோபத்தை வெளிப்படுத்த அரசு பொருட்களையோ பேருந்துகளையோ சேதப்படுத்துவது வாடிக்கையாகி விட்டது. அதுமட்டுமில்லாமல் பேருந்துகளைச் சேதப்படுத்தும் போது, அதில் பயணம் செய்யும் பயணிகளுக்குக் காயம் ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு, மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அதிரடி
 

மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் இன்று காவல் ஆணையரின் உத்தரவின் படி, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

பொதுவாகப் போராட்டங்களோ அல்லது ஆர்ப்பாட்டங்களோ நடக்கும் இடத்தில் மக்கள்  அரசின் மீது இருக்கும் கோபத்தை வெளிப்படுத்த அரசு பொருட்களையோ பேருந்துகளையோ சேதப்படுத்துவது வாடிக்கையாகி விட்டது. அதுமட்டுமில்லாமல் பேருந்துகளைச் சேதப்படுத்தும் போது, அதில் பயணம் செய்யும் பயணிகளுக்குக் காயம் ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு, மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 

அதாவது, அனைத்து அரசு பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, அதன் மூலம் வாகனத்தைச் சேதப்படுத்துபவர்களைக் கண்காணிக்கவும், இத்தகைய குற்றங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வதற்காகவும் இந்த கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் இன்று காவல் ஆணையரின் உத்தரவின் படி, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. மேலும், அரசு வாகனங்களைச் சேதப்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.